மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
பழநி: பழநி மயில் ரவுண்டான அருகே மா.கம்யூ., சார்பில், நில மோசடியில் ஈடுபட்ட நில மாபியா நபர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்து நேற்று மாலை 6:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிகழ்வில், ‘தண்டபாணி சுவாமி மடத்தின் நிலம், தம்புரான் தோட்டம், ஆயக்குடி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் நிலம், கவுமாரமடத்தின் நிலம் உள்ளிட்ட இடங்களை கையகப்படுத்த முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடகு கடைக்காரரை தாக்கியவர் கைது
-
ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்
-
ஆட் இன்றைய நிகழ்ச்சி ஆக.18
-
லஞ்சத்துக்கு எதிராக டில்லி மாணவர் உருவாக்கிய இணையதளம்: மக்களிடம் அமோக வரவேற்பு
-
மாணவியிடம் ஆபாச பேச்சு; ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த பெண் ஆசிரியையும் சிக்கினார்
-
சுற்றுலா வந்த வெளி மாநிலதொழிலதிபர் சாவு
Advertisement
Advertisement