சுற்றுலா வந்த வெளி மாநிலதொழிலதிபர் சாவு
கோட்டக்குப்பம்:கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ரியல் எஸ்டேட் அதிபர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு, சப்தகிரி நிவாஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 42; ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று காலை, பெங்களூரிலிருந்து காரில் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உட்பட 6 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். காலை செஞ்சியில் காலை உணவு அருந்தினர். பின், கோட்டகுப்பம் அருகே சின்னமுதலியார்சாவடி பகுதியில் உள்ள ரிசார்ட்டில் ரூம் எடுத்து தங்க சென்றனர். ரிசார்ட் வாசலில் காரை நிறுத்திய போது, கார்த்தி கீழே இறங்கியபோது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே, அவரை குடும்பத்தார், ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்ததை உறுதி செய்தார்.
கோட்டகுப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
காலை உணவு திட்ட டெண்டர் ரத்து கடையநல்லுார் நகராட்சி நடவடிக்கை
-
காட்டு யானையை கண்காணிக்க குழுக்கள்
-
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் காணிக்கை நகையை அணிந்த பூஜாரி சஸ்பெண்ட்
-
பறவைகள் சரணாலயம் அருகே கல்குவாரிக்கு அனுமதி கிராம மக்கள் எதிர்ப்பு
-
ஜெல்லி மீன்களால் மின் உற்பத்தி நிறுத்தம்
-
ஆன்லைன் வர்த்தகம் என ரூ.19.97 லட்சம் மோசடி