மாணவியிடம் ஆபாச பேச்சு; ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த பெண் ஆசிரியையும் சிக்கினார்

1

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டியூசனுக்கு வந்த மாணவியிடம், ஆபாசமாக பேசிய ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடந்தையாக இருந்த தனியார் பள்ளி ஆசிரியை இருவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி சாலை, ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த திவ்யா,38,. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில், மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். இவரது டியூசனில், படிக்கும் 16 வயது மாணவியை தனது மொபைல் மூலம், தனக்கு அறிமுகமான அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியான சண்முகசுந்தரராஜ்,61,. என்பவருடன் தினமும் பேச வைத்துள்ளார்.


ஆரம்பத்தில் மாணவியிடம் பேசிய சண்முகந்தரராஜ், வீடியோ அழைப்பில் ஆபாசமாக பேச துவங்கினார். இதற்கு திவ்யா உடந்தையாக இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, மாணவி தான் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் கூறி அழுதுள்ளார்.


இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசிலில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சண்முகசுந்தரராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திவ்யா இருவரையும் கைது செய்தனர்.

Advertisement