அடகு கடைக்காரரை தாக்கியவர் கைது

நடுவீரப்பட்டு,ஆக.18–

நகை அடகு  கடையில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு கணபதி நகரை சேர்ந்தவர் ராசு,55; இவர் நடுவீரப்பட்டு டானா சாவடியில் நகை அடகு கடை வைத்துள்ளார்.இவரது கடையில் வேலை செய்பவர்களிடம், சாத்தமாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த சசிக்குமார்,24; நடுவீரப்பட்டு அண்ணா நகர் வினோத் ஆகியோர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். அதனை ராசு கண்டித்தார்.

அதில் ஆத்திரமடைந்த இருவரும் ராசுவை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.இதில் படுகாயமடைந்த ராசு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து சசிக்குமாரை கைது செய்தனர். வினோத்தை தேடிவருகின்றனர்.

Advertisement