ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்
நடுவீரப்பட்டு:ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.
கடலுார் ஆர்.டி.ஓ.,சுந்தர்ராஜன் கடந்த 15 ம் தேதி இரவு நடுவீரப்பட்டு-எஸ்.புதுக்குப்பம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது, அவ்வழியே து கிராவல் ஏற்றி வந்த டி.என் 54 ஏசி 2698, டி.என் 54 ஏஏ 2416, டி.என் 50 ஏ கே 3385 ஆகிய பதிவெண் கொண்ட டிப்பர் லாரிகளை நிறுத்த முயன்றனர்.
உடன், மூன்று டிரைவர்களும், லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். லாரிகளை, அதிகாரிகள் சோதனை செய்ததில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கிராவலை, அனுமதி இல்லாத நேரத்தில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து மூன்று டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து, நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சிலம்பிநாதன்பேட்டை வி.ஏ.ஓ., சிவலிங்கம் நேற்ற முன்தினம் அளித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீசார் 3 லாரிகள் மற்றும் அழகப்பாசமுத்திரத்தில் உள்ள குவாரி உரிமையாளர் பாவாடை மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
விபத்தில் வாலிபர் பலி
-
யானைக்காட்டில் 'திக்திக்' பயணம் கடம்பூர் மலை கிராம மக்கள் குமுறல்
-
நாம் அறிவியல் யுகத்தில் தான் வாழ்கிறோமா? மயான வசதி இல்லாமல் 3 நாளாக காத்திருந்த சடலம் 'இறப்பு வந்தாலே இன்னல்'
-
தீ வைத்து டூவீலர் எரிப்பு
-
ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுக்கு பின் கைது
-
நலவாரியம் அமைக்க எழுத்தாளர்கள் ஆவல்