ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
ராஞ்சி: மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அரசுப் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வுகளை ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மூன்று தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்தும், மூன்று போட்டித் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும், மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து, 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
அதுமட்டுமின்றி ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, காங்., வாபஸ் பெற வேண்டும் என, அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் அரசுப் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வுகளை ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்; அது சிறியது, பெரியது என எதுவாக இருந்தாலும் விசாரணை நடைபெறும்.
தேர்வு சீர்திருத்தங்கள் சார்ந்து வெளிப்படைத்தன்மை உடன் அரசு செயல்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார். இந்த முடிவு அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
Without abusing the PM or СМ.
எல்லா ஊழல்களையும் செய்துவிட்டு மாணவர்கள் போராட்டத்திற்குப்பின் வேறு வழியில்லாமல் தேர்வை ரத்து செய்வதும் இனிமேல் தேர்வை வெளிப்படையாக நடத்துவேன் என்பதும் என்னவிதமான நாடகம் தெரியுமா? தேர்வை இனிமேல் வெளிப்படையாக நடத்தமுடியும் என்றால் முன்பே வெளிப்படையாக நடத்தாதது ஏன்? ஒவ்வொன்றிக்கும் போராட்டம் நடத்திதான் சரி செய்ய வேண்டுமா?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, காங்., வாபஸ்
பெற வேண்டும் என, அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்தி இருந்தனர். ராகுலுக்கு எங்கு சென்றாலும் இந்தியாவில் எதிர்ப்புதான்
காங்கிரசு கட்சியும் நிலைக்கும் மத்திய அரசை எதற்கெடுத்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே கெட்ட எண்ணத்தில்தான் இவர் இருப்பதால் எல்லாமே இவருக்கு எதிராகவே போகிறது இனி வரும் தேர்தல்களில் மாநில தேர்தலோ அல்லது மத்திய தேர்தலோ இரண்டிலும் இவரால் கட்சிக்கு மிக அதிகமான பாதிப்பு உண்டாகும் கட்சியே காணாமல் போனாலும் போகலாம் சிறு பிள்ளைத்தனம் வெகுவாக கட்சியை பாதிக்கும்மேலும்
-
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது; மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு
-
மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: சொல்கிறார் கர்நாடகா முதல்வர்
-
தலைமை செயலகத்தில் முதல்வர் அறை மாற்றம் ஏன்; சட்டசபையில் திமுக, தவெக காரசார விவாதம்
-
காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது; அமைச்சர் ராஜ்மோகன்
-
சொல்கிறார்கள் ––––––––––– 4 ஏக்கர் இயற்கை விவசாயத்தில் ஓராண்டு லாபம் ரூ.10 லட்சம் –––––––––––
-
இந்தியாவில் 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவழக்குகள்; முழு பட்டியல் இதோ!