மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: சொல்கிறார் கர்நாடகா முதல்வர்

2


பெங்களூரு: வனத்துறையினரால் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை தமிழக அரசியல் கட்சியினர் எழுப்புவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கர்நாடகா முதல்வர் சிவக்குமார், 'எந்த மாநிலமும் மற்றொரு மாநில விவகாரத்தில் தலையிட கூடாது'' என்றார்.


அவரது பேட்டி: இது ஒரு கூட்டாட்சி அமைப்பு. ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது. பன்னீர்செல்வமோ அல்லது வேறு யாராக இருந்தாலும், அவர்களுக்கு அடிப்படை நாகரிகம் இருக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் நான் எந்த வகையிலும் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலங்களுக்கு சொந்த பிரச்னை உள்ளது; அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்கிறோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் நாங்கள் காக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் சிவக்குமார் கூறினார்.


நோ கமென்ட்ஸ்!




இந்த சம்பவத்தில் முதல்வர் விஜய் விசாரணை கோரியது குறித்த கேள்விக்கு, ''அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது ஒரு பொதுவான விவாதம். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்ய வேண்டும்'' என முதல்வர் சிவக்குமார் பதில் அளித்தார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

கர்நாடகா முதல்வர் சிவக்குமார் நிருபர்களிடம் சொன்னது என்ன; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement