இந்தியாவில் 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவழக்குகள்; முழு பட்டியல் இதோ!

16


-நமது சிறப்பு நிருபர்-


நாட்டின் உள்ள 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எம்பி, எம்எல்ஏக்கள், மாநில முதல்வர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்து உள்ளார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நாட்டின் உள்ள 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதிக வழக்கு நிலுவையில் உள்ள மாநில முதல்வர்கள் விபரம் பின்வருமாறு:

1.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி- 89 வழக்குகள்

2. மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி- 29 வழக்குகள்

3. கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார்- 19 வழக்குகள்

4. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு- 19 வழக்குகள்

5.கேரள முதல்வர் சதீஷன்- 18 வழக்குகள்

6. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்- 5 வழக்குகள்

7. மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்- 4 வழக்குகள்

8. ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங்- 4 வழக்குகள்

9. தமிழக முதல்வர் விஜய்- 2 வழக்குகள்

10. பீஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி- 2 வழக்குகள்

அதேபோல் சிக்கிம் முதல்வர் தமாங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி, ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ஆகியோர் மீது தலா ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது.


பார்லிமென்ட்




மொத்தம் உள்ள லோக்சபா எம்பிக்கள் 543 பேரில் 251 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 170 பேர் (31 சதவீதம்) மீது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான கடும் குற்றவழக்குகள் இருக்கின்றன.

அதேபோல் ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள எம்.பி.க்கள் 233 பேரில், 75 பேர் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய கடும் குற்ற வழக்குகள் ஆகும்.

மாநில வாரியாக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள எம்எல்ஏக்களின் சதவீதம் பின்வருமாறு:

* மேற்குவங்கம்- 58 சதவீதம்

* கேரளா- 57 சதவீதம்

* ஆந்திரா- 56 சதவீதம்

* தெலுங்கானா- 49 சதவீதம்

* ஜார்க்கண்ட்-45 சதவீதம்

* ஒடிசா- 45 சதவீதம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement