காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது; அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது; காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்ட எம்எல்ஏ எ.வ.வேலு பேசினார். இதற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன் பதில் அளித்து பேசினர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு கருத்துக்களை இங்கே வழங்கும் போது பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் , நாங்கள் இதை செய்தோம், இதை செய்தோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறாரே தவிர, மேடைப் பேச்சு அல்ல; கருத்துக்கள் வழங்க வேண்டியது மானியக்கோரிக்கை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்'' என்றார்.
இதற்கிடையே சட்டசபையில் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்ற அவசியம் என்ன என எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். இதன் பிறகு அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: கருணாநிதியை நாங்கள் மதிக்கிறோம்.
நேற்று எங்கள் கட்சி உறுப்பினர் கூட அவர் பெயரை சொல்லிய போது, எழுந்து நின்று தாய் உள்ளத்தோடு அதற்காக வருத்தம் தெரிவித்த மனிதர் இங்கே அமர்ந்து கொண்டு இருக்கிறார்; இங்கே பேசும் போது திமுக உறுப்பினர் இந்த மைக், டெபிள் செய்தது நாங்கள் தான் என்று சொல்கிறார்; இது மக்கள் வரி பணத்தில் தமிழக அரசால் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
திட்டங்கள் பெயர் மாற்றம் குறித்து பல உறுப்பினர் பலமுறை சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். பெயர் மாற்றம் என்பது காலம் காலமாக நடப்பது; அம்மா பசுமை இல்லம், கருணாநிதி கனவு இல்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமாக மாறி இருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளிக் ஆக மாறி இருக்கிறது.
இங்கே 10 இடங்களுக்கு போய் செல்வம் சேர்த்து வருகிறேன்; நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு என்று கூறி தமிழகத்தின் கல்வி கண் திறந்தவர் காமராஜர் பெயர் தான் காலை உணவு திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 232 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
கருங்காலி கருணாநிதி காலை உணவு திட்டம்னு வைக்கலாம். ஏவ வேலு, சேகர் பாபு எல்லாம் தூக்கி சமிட்டுவிட்டார் ஸ்டாலின் எப்பன்னு தெரியுமா? ... அமரர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையின் போது துக்கம் விசாரிக்க போன இடத்தில ஒண்ணுமே தெரியாத மாதரி, ஆர்ம்ஸ்ட்ரோங் மனைவிடம் பாவியமா நடித்தார். அவரை கொன்றவர்கள் சபரிசன், சேகர் பாபு, பெரும் தொகை, .... தெரியாத மாதரி நடித்த தி.திருமா ... வழுவபவனுக்கு தீவட்டி பிடிக்கும் திருமா
மதிப்பிற்குரிய மந்திர அவர்களே, சீக்கிரமாக பெயர்களை மாற்றிவிடுங்கள் இல்ல பெரிய.. யார் ,சின்னவர் சின்னவரோட பேரின் ,அவரது பேரன் பெயர், என்று மாறியிருக்கும்,நல்ல வேளையாக உங்கள் அரசு வந்து அது நடக்காமல் போயிடுச்சு .
அப்புறம் எதற்கு அண்ணன் சீர்வரிசை திட்டம், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு என தனக்கு தானே தம்பட்டம் அடித்து பீற்றிக்கொள்ளவேண்டும்? இதற்கும் காமராஜர் சீர் வரிசை திட்டம், காமராஜர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு என போடவேண்டியது தானே?
இந்த வேலு யாரு காமராஜரை விமரிசிக்க. இன்னும் எவ்வளவு காலம் இந்த வேலு, சேகர் பாபு போன்றோர் இவளவு ஊழலை செயதுவிட்டு சுத்திகிட்டு இருப்பார்கள். ஜெயலலிதா உள்லே அனுப்பிச்சாச்சு இவனுங்களை ஒன்னும் செய்ய துப்பு இல்லை.
காமராசருக்கு பின் அரசியல் பின்தங்கிவிட்டது, அவருக்குப்பின் டெல்லி வரை அணைத்து மாநிலங்களிலும் செல்வாக்குப்பெற்ற ஒரே தலைவர் மூப்பனார் மட்டுமே.
எந்த நிறுவனம் அதிகம் வரி செலுத்தி வருகிறது. அந்த நிறுவனர் பெயரை வைக்க வேண்டும். கலைஞர் பெயர் திமுக நிதி, ஜெயா பெயர் அண்ணா திமுக நிதி, காமராசர் பெயர் காங்கிரஸ் நிதி... திராவிடர் கழக பெரியார் ஒரு கிளார்க், கவுன்சிலர் கூட கிடையாது. விதண்டா வாதம் புரிபவர். இவர் பெயரை தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு நிறுவனங்களில் இருந்து நீக்க வேண்டும். நீதிமன்றம் தானே முன்வந்து பெயர் நீக்க வழக்காக மாற்றி தீர்வு காண முடியும்.
1972இல் MGR காமராசரின் ஸ்தாபன காங்கிரசில் சேர ஆர்வமாக தூது அனுப்பியபோது, சினிமா ஆட்களை முன்னிலைப்படுத்தி, நம்பி அரசியல் செய்ய விருப்பப்படவில்லை என காமராசர் மறுத்து விட்டாராம். இப்போ அவரது பெயரை வைத்து சினிமாத்துறை ஆளு அரசியல் செய்கிறார்.
காலை உணவுக்கு தொடக்க புள்ளி வைத்தவர் திரு ஸ்டாலின் தானே. முன்னாள் முதல்வர் பிறப்பித்த சட்டம் தானே.. பிறகு ஏன் இந்த பெயர் மாற்றம். முந்திய திட்டத்தில் எந்த இடத்திலும் தி மு க பெயர் இல்லைஏ ? இந்த நடைமுறை மற்ற அரசியில் கட்சியும் செய்யக்கூடும் இல்லையா?. இதை தவிர்க்கவேண்டும் / தவிர்துஇருக்கவேண்டும்
கொத்தடிமை என்பதை நிருபித்து விட்டாய்...
இது கர்மவீரருக்கு செய்யும் மரியாதையில்லை. சாதி வாக்குவங்கிக்காக நாடகம். அவ்வளவுதான்
1972இல் MGR காமராசரின் ஸ்தாபன காங்கிரசில் சேர ஆர்வமாக தூது அனுப்பிய போது, சினிமா ஆட்களை முன்னிலைப்படுத்தி, நம்பி அரசியல் செய்ய விருப்பப்படவில்லை என காமராசர் மறுத்து விட்டாராம். இப்போ அவரது பெயரை வைத்து சினிமாத்துறை ஆளு அரசியல் செய்கிறார்.மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு