சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது; மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு

5


புதுடில்லி: மெட்டா நிறுவனம் இந்தியச் சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது என்று அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

மெட்டா நிறுவனத்துடனான கலந்துரையாடலின்போது, மத்திய அரசு கூறியதாவது:

* குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் விவகாரத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

* இந்தியச் சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது.

* குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பதிவுகள் குறித்து அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

* சமூக ஊடக தளங்களை தணிக்கை செய்வதோ அல்லது சட்டபூர்வமான பேச்சுரிமையை ஒடுக்குவதோ எங்களின் நோக்கம் அல்ல.

* ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகள் மற்றொரு கவலைக்குரிய விஷயமாகும். பயனர்கள் தாங்கள் பார்ப்பது செயற்கையாக உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையானதா என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில், அது தெளிவாகக் குறியிடப்பட வேண்டும்.

* இந்தியாவின் கலாசார சூழலுக்கு ஏற்ப உள்ளடக்கக் கட்டுப்பாட்டை மேம்படுத்துமாறு மத்திய அரசு மெட்டா நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளது.

Advertisement