ஓணம் பண்டிகையை முன்னிட்டு செண்டுமல்லி பூக்கள் அறுவடை

தொண்டாமுத்தூர்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், செண்டுமல்லி பூக்கள் அறுவடை விறுவிறுப்பாக நடக்கிறது.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வடிவேலாம்பாளையம், மோளப்பாளையம், மங்கலபாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில், செண்டுமல்லி, கோழிக்கொண்டை, வாடாமல்லி சாகுபடி செய்யப்படும்.

ஓணம் பண்டிகைக்காக கேரளத்துக்கு பூக்கள் அறுவடை செய்து அனுப்பப்படும். இந்தாண்டும் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சித்திரை இறுதியில், 250 ஏக்கர் பரப்பளவில், பூக்கள் சாகுபடி செய்யப்பட்டது.

26ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால், பூக்கள் அறுவடை தீவிரமாக நடக்கிறது.

வடிவேலம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘கடந்தாண்டு, அனைத்து பூக்களும், கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையானது. நல்ல லாபம் கிடைத்தது. இந்தாண்டு, திண்டுக்கல்லில் இருந்தும் அதிகளவு பூக்கள் கேரளத்துக்கு செல்வதால், கோவையில் விலை குறைந்து, செண்டுமல்லி, 60 ரூபாய்க்கும், வாடாமல்லி, 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கூலி, வண்டி வாடகை, செலவுகளை கணக்கிட்டால், பெரிய லாபம் கிடைக்காது’ என்றனர்.

Advertisement