தென் மாநில முதல்வர்கள் மாநாடு: இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா 

3

சென்னை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று தமிழகம் வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாட்டில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு, மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டிற்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையேற்கிறார். ஆறு மாநில தலைமை செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்க, இன்று இரவு, டில்லியில் இருந்து தனி விமானத்தில் அமித் ஷா, சென்னைக்கு வர உள்ளார். அங்கிருந்து மாநாடு நடக்க உள்ள நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்.

அங்கு முதல்வர்களுடனான இரவு விருந்தில் பங்கேற்கிறார். நாளை மாநாட்டில் பங்கேற்ற பின், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலுக்கு செல்கிறார். தரிசனம் முடிந்து, சென்னை சென்று, அங்கிருந்து டில்லி செல்ல உள்ளார்.

இந்நிலையில், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக காங்., தலைவர் மணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.

Advertisement