ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் சீமை கருவேல மரங்கள் ஏலம் ரத்து
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் சீமை கருவேல மரங்களை விற்பனை செய்வதற்கான ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள், அரசு மதிப்பீடு தொகை அதிகம் என கூறி, ஏலம் கேட்க முன் வராததால், ஏலம் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் 2வது பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 182 ஏக்கரில் அடர்ந்த சீமை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. கண்மாயில் சூழ்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை ஏலம் எடுப்பதற்கான ஆரம்பத்தொகை ரூ. 16 லட்சத்து 66 ஆயிரத்து 667 ம் ,அதற்கான ஜி.எஸ்.டி.,யும், நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மேலும், ஏலத்தில் பங்குபெறுவதற்கான வைப்புத் தொகையாக ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 340 ரூபாய் செலுத்தி ஆக.18 ல் ஏலத்தில் கலந்து கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
நேற்று, ஆர்.எஸ்.மங்கலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், உதவி பொறியாளர் விக்னேஷ் தலைமையிலும், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் முன்னிலையிலும், ஏலத்தில் வியாபாரிகள் 9 பேர் கலந்து கொண்டனர். அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை அதிகமாக உள்ளதாக கூறி, யாரும் ஏலம் கேட்கவில்லை. இதனால், நேற்றைய ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், வேறொரு நாளில் ஏலம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏலம் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை
-
மஹிந்திரா 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்
-
பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி