அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்றிருந்த இந்திய பெண்ணை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் சிறைபிடித்து வைத்துள்ள நிலையில், அவரை விடுவிக்க வலியுறுத்தி அவரது மகள் கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளார்.
வட கரோலினாவில் சிறப்புத் தேவைக் குழந்தைகளுக்கான பொதுப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் வெங்கடா வசம்செட்டி, கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசித்து வருகிறார். மேலும், இவர் கடந்த 2013 முதல் கிரீன் கார்டு வைத்துள்ளார். இந்த சூழலில், கடந்த 2022ம் ஆண்டு தனது வயதான பெற்றோரைப் பராமரிக்க இந்தியா வந்திருந்த வெங்கடா வசம்செட்டி, கொரோனா தொற்று மற்றும் மருத்துவச் சிக்கல்கள் காரணமாக, மீண்டும் அமெரிக்கா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அவர் அமெரிக்கா திரும்பினார்.
180 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியதால் அவரது கிரீன் கார்டு செயலிழந்து விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த மே 19ம் தேதி குடியேற்ற நீதிபதி அவருக்கு எதிரான நாடுகடத்தும் வழக்கை ரத்து செய்தார்.
நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த போதிலும், வழக்கமான குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்காக, கடந்த 11ம் தேதி ஷார்லோட் அலுவலகத்திற்குச் சென்றபோது, வசம்செட்டி கைது செய்யப்பட்டு, ஜார்ஜியாவில் உள்ள இர்வின் கவுண்டி தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், கைது நடவடிக்கைக்கு எதிராக ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும், உடல்நலம் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் வசம்செட்டிக்கு போதிய மருத்துவ வசதிகள் மற்றும் முறையான உணவு வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினர். இதனை விசாரித்த நீதிமன்றம், வசம்செட்டியைத் தொடர்ந்து காவலில் வைப்பதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு குடியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, டெக்சாஸ் மற்றும் நியூ ஜெர்சியில் உரிமம் பெற்ற குடியேற்ற வழக்கறிஞராக இருந்து வரும் வசம்செட்டியின் மகள் யசுஸ்வினி வசம்செட்டி, தன்னுடைய தாயை விடுவிக்கக் கோரி 'ப்ரீ வெங்கடா' (Free Venkata) என்ற கையெழுத்து இயக்கத்தை துவங்கி, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றார்.
மகள் வக்கீல் அப்பா பல ஆண்டு வாழ்ந்து கிரீன் கார்டு பெற்றுள்ளார். கால தாமதத்தை சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் அமெரிக்கர்கள். அனால் இங்கு 6 கொலை செய்தவர் 7வது கொலையில் கைது பிறகு விடுதலை. மத்திய அரசு தன் வேலை அது அல்ல என்று ஒதுங்கிக்கொள்கிறது. மாநில அரசு அரசியல் வாதிகளிடம் உறவாடுகிறது.
Such people try to act oversmart in the US and bring shame to fellow country men. They should realise that beggars cannot be choosers.