பைக்குகள் மோதல் 6 பேர் படுகாயம்

விருத்தாசலம்: பைக்குகள் மோதிய விபத்தில், 2 பெண் உட்பட 6 பேர் காயமடைந்தனர். 

மயிலாடுதுறை பெசன்ட் நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 45. இவர் நேற்று முன்தினம் பைக்கில் விருத்தாசலம் – வேப்பூர் சாலையில் சென்றார்.

அப்போது, அவரிடம் லிப்ட் கேட்டு, திருப்பூரை சேர்ந்த சுரேஷ், 40; மகன் விஷ்வா ஆகிய இருவரும் பயணம் செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த பரவளூர் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பரவளூரைச் சேர்ந்த கீதா, தனது ஸ்கூட்டரை வலது புறம் திருப்பினார். அப்போது, சீனிவாசன் பைக், கீதாவின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.

இதில், சீனிவாசன், சுரேஷ், விஷ்வா மற்றும் கீதா, அவரது ஸ்கூட்டரில் பயணம் செய்த அதேபகுதியை சேர்ந்த ராஜேந்திரன், தனலட்சுமி ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் ஆறு பேரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு , அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

Advertisement