விபத்தில் சிக்கிய கல்லுாரி மாணவரை காப்பாற்றாத லாரி டிரைவர், ஓனர் கைது

ஓசூர்: ஓசூர் அருகே லாரி மீது பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி-யான வழக்கில், விபத்திற்கு காரணமாகி, காப்பாற்றாமல் சென்ற லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் கைது செய்-தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சித்தனப்பள்ளி, வாக்கில் லேஅ-வுட்டை சேர்ந்தவர் சஞ்சித், 19. பெங்களூருவில் ஒரு கல்லுா-ரியில் இரண்டாமாண்டு டிப்ளமோ படித்து வந்தார். இவரது தாய் மம்தா, 43. இவரை அழைத்துக்கொண்டு கடந்த, 16ல், சுசுகி டி.ஆர்.டி., - எஸ்.எக்ஸ்., பைக்கில் சஞ்சித் சென்றுள்ளார். அதிகாலை, 4:00 மணியளவில், தளி ஜங்கன் மேம்-பாலம் அருகில், ஓசூர் - பெங்களூரு சாலையில், நின்றிருந்த லாரி மீது மோதியதில், சஞ்சித் பலியானார். மம்தா படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர். இதில், லாரி டிரைவரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது தெரிந்தது. இதனால் அவரையும், லாரி உரிமையாளரையும் ஓசூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது: விபத்து நடந்த இடத்தில், 'சிசிடிவி' காட்சி களை பார்த்தபோது அந்த இடத்தில் சிக்னல் ஏதுமின்றி தேசிய நெடுஞ்சாலையிலேயே லாரி நிற்பதும், பின்னால் வந்த பைக் மோதியதும் தெரிந்தது. அதை பார்த்தும், மொபைலில் பேசிய படி, லாரி டிரைவர் அங்கிருந்து சென்றதால், இது திட்டமிட்ட விபத்தா என்ற கோண த்தில் விசாரிக்கப்பட்டது.
லாரி டிரைவர் அஞ்செட்டி அடுத்த கேரட்டியை சேர்ந்த வேல்மு-ருகன், 32, என தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், விபத்து நடந்த தினத்தில் ஜல்லி லோடுடன் மூக்கண்டப்பள்ளிக்கு சென்றதாகவும், வழி தெரியாமல் நின்றபோது பின்னால் வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது என்றார்.
மேலும், லாரி உரிமையாளரான ஓசூர், நாகொண்டப்பள்ளியை சேர்ந்த இறையருள், 26, என்பவரிடம் கூறியபோது, 'லோடை இறக்கி விட்டு நீ வந்து விடு' எனக்கூறியதால் சென்று விட்டேன், என போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால், அந்த இடத்தில், உயி-ருக்கு போராடிய கல்லுாரி மாணவர் சஞ்சித், முக்கால் மணி நேர போராட்டத்திற்கு பின் உயிரிழந்துள்ளார். இதனால் விபத்திற்கு காரணமாகி, உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றாமல் சென்ற லாரி டிரைவர் வேல்முருகன், லாரி உரிமையாளர் இறையருள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement