மனைவியை தாக்கிய புகாரில் கணவர் உள்பட மூவர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த மாதுார்பதியை சேர்ந்தவர் வினோதினி, 29. இவருக்கும் கீழ் வீதியை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. லோகேசுக்கு வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது தெரிந்து, கடந்த ஓராண்டிற்கு முன், வினோதினி தன் தாய் வீடான மாதுார்
பதிக்கு வந்து விட்டார்.


கடந்த, 18ல், சமாதானம் பேசுவதற்காக லோகேஷ், தன் குடும்-பத்துடன் வினோதினி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கும் தகராறு ஈடுபட்டது. இதில், வினோதினியை, லோகேஷ், 35, அவ-ரது அண்ணன் கருணாகரன், 38, தாய் வேங்கம்மாள், 58, மூவரும் சேர்ந்து தாக்கினர். வினோதினி புகார் படி அவரை தாக்கிய மூவர் மீதும், மத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement