பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
கிருஷ்ணகிரி: பால் கொள்முதல் விலையை உயர்த்திய, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு தலைமை சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் நசீர் அகமது தலைமை வகித்தார். மாநில செய-லாளர் ராஜா, மாநில செயல் தலைவி சக்தி, மாநில துணைத்த-லைவர் கணேசன், மாவட்ட செயலாளர் பரசுராமன், மாநில வணிக தலைவர் தணிகாசலம், மத்திய மாவட்ட செயலாளர் பச்-சையப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வை, தமிழ்-நாடு விவசாயிகள் விழிப்புணர்வு தலைமை சங்கம் வரவேற்கிறது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. இந்த விலை உயர்வு, 4.2 கொழுப்பு சத்தும், 8.3 கொழுப்பு அல்லாத இதர சத்-துள்ள பாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை, கலப்பின பசுக்களின் பாலின் தரம், 4.0 கொழுப்பு சத்தும், 8.0 கொழுப்பு அல்லாத இதர சத்தும் உள்ள பாலுக்கும் வழங்க வேண்டும் என, தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பது உள்-ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?