புதுச்சேரி - கடலுார் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் அதிரடி
பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையில், போக்குவரத்து நேரிசல் மிகுந்த காலை, மாலை நேரங்களில், கனரக வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பது குறித்து, கிருமாம்பாக்கம் போக்குவரத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து நேரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில், புதுச்சேரி நகர பகுதியில், கனரக வாகனங்களின் போக்குவரத்து தடை செய்து சீனியர் எஸ்.பி., திவ்யா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதுச்சேரி - கடலுார் சாலையில், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் அறிவிப்பு செய்துள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் முள்ளோடை, கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங்குப்பம், தேடுவார்நத்தம், பாகூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் தன்வந்திரி கூறுகையில்'' கடலுார் வழியாக வரும் கனரக வாகனங்கள், புறவழிச் சாலையில் செல்லலாம் அல்லது முள்ளோடை பகுதியில் நிறுத்தி வைத்து, காலை 10 மணிக்கு பிறகும், மாலை 7.00 மணிக்கு பின்பும் செல்ல வேண்டும் என்றார்.''
மேலும்
-
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
-
பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
-
மனைவியை தாக்கிய புகாரில் கணவர் உள்பட மூவர் மீது வழக்கு
-
விபத்தில் சிக்கிய கல்லுாரி மாணவரை காப்பாற்றாத லாரி டிரைவர், ஓனர் கைது
-
'மாநகராட்சியில் 1 மாதத்துக்கு 700 நாய்களுக்கு கருத்தடை'
-
பைக்கில் இருந்து விழுந்தவர் பலி