நல்லாசிரியர் விருதுக்கு நேர்காணல்

தேனி:மாநில அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக செப்.,5ல் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் இருந்து மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு நேர்காணல் சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

சி.இ.ஓ., முருகன் தலைமையில், டி.இ.ஓ.,க்கள், தலைமையாசிரியர்கள் என 9 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்தினர். அரசு, உதவி பெறும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என விருதுக்கு விண்ணப்பித்திருந்த 25 பேர் பங்கேற்றனர். அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. செப்., முதல் வாரத்தில் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement