தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்க தளத்தில் கால்நடைகளை பதிவு செய்ய அறிவுருத்தல்
கடலுார்:கால்நடைகளை தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம் தளத்தில் பதிவு செய்திட கலெக்டர் அறிவுருத்தி உள்ளார்.
நாட்டில் வளர்க்கப்படும் கால்நடை குறித்தி விபரங்களை, தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம் தளத்தில் பதிவு செய்ய மத்திய அரசு வது மத்திய அரசால் அறிவுருத்தியுள்ளது. அதன்படி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர்கள், வளர்க்கும் கால்நடை குறித்த விபரங்களை தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கக தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கிராமங்களுக்கு நேரில் வருகை தரும் போது, கால்நடை வளர்ப்போர் தங்களுடைய ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வழங்கி, தங்களது கால்நடைகளை மேற்கூறிய இணைய தளத்தில் பதிவு செய்ய முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பதிவு செய்யும் போது தேவையான ஓ.டி.பி., வழங்கி விரைவாக முடிக்கலாம்.
இந்தப் பதிவு எதிர்காலத்தில் அரசின் பல்வேறு கால்நடை நலத்திட்டங்கள், தடுப்பூசி மற்றும் கால்நடை சுகாதார சேவைகள், அரசு உதவிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான நிதி, கடன் வசதிகளைப் பெறுவதற்கு முக்கியமானதாக அமையும்.
ஏதேனும் கிராமத்தில் பதிவு செய்யும் பணி நடைபெறும் போது தங்களால் கலந்து கொள்ள இயலாதவர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் மொபைல் போனுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை மருத்துவமனைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இப்பணி வரும் செப். 30ம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது.
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?