வங்கதேச அதிபராக மிர்சா பஹ்ருல் தேர்வு
டாக்கா: வங்கதேசத்தின் புதிய அதிபராக பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் மின்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
வங்கதேச அதிபராக இருந்த முகமது ஷஹாபுதீன் ஜூலை 24ம் தேதி பதவி விலகினார். ஷேக் ஹசீனா ஆட்சிக் காலம் முதல் அதிபராக இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார். பிரதமர் தாரிக் ரஹ்மான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என தகவல் வெளியாகின.
இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று( ஆகஸ்ட் 20) நடந்தது.
அதில், வங்கதேசத்தை ஆளும் வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) சார்பில் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் களமிறங்கினார். கடந்த 35 ஆண்டுகளாக போட்டியே இல்லாமல் வங்கதேசத்தில் அதிபர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 11 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒலி அஹமது என்பவரை களமிறக்கின. இதனால், இன்று தேர்தல் நடந்தது.
அதில் 255 ஓட்டுகள் பெற்று மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் புதிய அதிபராக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஒலி அஹமது 88 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?