பெயர் பலகை இல்லாத ரோடு பொதுமக்கள் வலியுறுத்தல்
சிவகங்கை: மதுரை - - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை நகரில் முக்கிய ரோடு சந்திப்பில் பெயர் பலகை வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ரோட்டில் சிவகங்கை நகரில் அரண்மனைவாசல், மதுரை முக்கு, திருப்புத்துார் மேலுார் ரோடு, மானாமதுரை - இளையான்குடி சந்திப்பு, தொண்டி ரோடு- ரயில்வே ரோடு சந்திப்பு போன்ற முக்கிய ரோடுகள் சந்திக்கும் இடங்களில் விளம்பர பதாகைகளை வைத்து அடைத்து விட்டனர்.
இதனால் நகருக்கு வெளியே செல்லும் ஊர்கள் பற்றிய பெயர் பலகை இன்றி வாகன ஓட்டிகள், பிற மாவட்ட பயணிகள் தவித்து வருகின்றனர்.
எனவே தனியார் விளம்பர பதாகைகளை அகற்றி விட்டு, அந்த இடங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திசை, இடம், பிற நகருக்கு செல்லும் துாரம் குறித்த நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பதாகைகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் சார்பில் வலியுறுத்தப்படுகின்றன.
இது குறித்து சிவகங்கை நாகராஜன் கூறியதாவது: நகரில் முக்கிய ரோடுகள் சந்திக்கும் இடம், முக்கிய நகரங்களின் பெயர் பலகை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்படவே இல்லை.
தனியார் விளம்பர பேனர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லும் நகர் குறித்த பெயர் பலகைகள் இல்லாததால், சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்றார்.
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?