‛'ஸ்மார்ட் கார்டு' இயந்திரம் பழுது: புதிய கார்டுக்கு சிக்கல்
சிவகங்கை: சிவகங்கையில் பழுதான 'ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு இயந்திரம் 8 மாதங்களாக சரி செய்யப்படாததால் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் தவிப்பில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்கள் மூலமும், கலெக்டரிடம் வழங்கப்படும் மனுக்கள் மூலமும் புதிய ரேஷன் கார்டு, நகல் கார்டு பெறுவதற்காக 5000 குடும்பத்தினர் விண்ணப்பித்தனர்.
மக்கள் வழங்கும் மனுக்களை ஆய்வு செய்து, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இயந்திரம் மூலம் 'ஸ்மார்ட் கார்டு' தயாரித்து வினியோகித்தனர்.
இந்நிலையில் ஜன.,ல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு இயந்திரம் பழுதானது. மாவட்ட வழங்கல் அதிகாரிகள் இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதனால் ஜன., முதல் ஆக., வரை புதிய ரேஷன் கார்டு, கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், விலாசம் மாற்றம் மற்றும் நகல் கார்டு கேட்டு விண்ணப்பித்த 5000 குடும்பத்தினர் 'ஸ்மார்ட் கார்டு' கிடைக்காமல் தவிப்பில் உள்ளனர்.
இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது: 'ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு இயந்திரத்தை பழுதுநீக்க அனுமதி கோரி சென்னை வழங்கல் அலுவலக கமிஷனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து அனுமதி கிடைத்ததும், பழுதான இயந்திரத்தை சரி செய்து 'ஸ்மார்ட் கார்டு' தடையின்றி வழங்கப்படும் என்றனர்.
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?