மண்டல செஸ் போட்டியில் அரசு பாலிடெக்னிக் 2ம் இடம்

வனவாசி: சேலம் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான செஸ், கேரம் போட்டி, வனவாசி அரசு பாலிடெக்னிக்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. வனவாசி பாலிடெக்னிக் முதல்வர் வர-தகுரு தொடங்கி வைத்தார். அரசு, தனியார் என, 13 பாலிடெக்-னிக்கில் இருந்து வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.


ஆண்கள் கேரம் போட்டியில், சேலம் சி.எஸ்.ஐ.,; தியாகராஜா; ராசிபுரம் முத்தயாம்மாள்; மல்லுார் கொங்கு அணிகள்; பெண்கள் கேரத்தில் தியாகராஜா; சி.எஸ்.ஐ.,; வனவாசி அரசு பாலி-டெக்னிக்; மேச்சேரி காவேரி; செஸ் ஆண்கள் பிரிவில் தியாக-ராஜா; அரசு பாலிடெக்னிக்; கொங்கு; முத்தாயம்மாள்; செஸ் பெண்கள் பிரிவில் தியாகராஜா; அரசு பாலிடெக்னிக்; சி.எஸ்.ஐ.,; முத்தயாம்மாள் அணிகள் முறையே, முதல் நான்கு இடங்களை பிடித்தன. இதில் முதலிடம் பெற்ற அணியினர் மட்டும், மாநில போட்டிக்கு தகுதி பெற்றன.

Advertisement