இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர்களை சாலையில் தரையிறக்கி ஒத்திகை

4


ஜெய்சல்மார்: ராஜஸ்தானில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நமது ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர்களை சாலையில் தரையிறக்கி வெற்றிகரமாக ஒத்திகை செய்தனர்.

ஜெய்சால்மர் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள ஒரு முக்கிய சாலையில் இந்த ராணுவ ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அப்பாச்சி, எல்.சி.ஹெச்., மற்றும் சீட்டா போன்ற ரகங்களைச் சேர்ந்த நான்கு முதல் ஐந்து ஹெலிகாப்டர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டன.

வழக்கமான தரையிறங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத நிலையில், மாற்றுத் தளங்களைப் பயன்படுத்தி ராணுவ ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான திறனை மேம்படுத்துவதற்காக, இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஒத்திகையின் நோக்கம் குறித்து இந்திய ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தக் குறிப்பும் வெளியிடப்படவில்லை.

Advertisement