366 கோவில்களில் ரூ.245 கோடியில் திருப்பணி: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
சென்னை : ''சிதிலமடைந்த 366 கோவில்களில், 245 கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்; கோவில் கல்வி நிறுவனங்களில், காலி பணியிடங்களை நிரப்ப, திருக்கோவில் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் 106 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:
* தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 64 கோவில்களில் 125 கோடி; முழுமையாக சிதிலமடைந்த 75 கோவில்களில் 50 கோடி; பகுதியளவு சிதிலமடைந்த 75 கோவில்களில் 35 கோடி; 152 கோவில்களில் 35 கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்
* சென்னையை அடுத்த குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 5.50 கோடி ரூபாயில் மூன்றாம் சுற்று மண்டபம் கட்டப்படும்
* திருச்சி மாவட்டம், அன்பில் மாரியம்மன் கோவிலில், 1.50 கோடி ரூபாயில், அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் கட்டப்படும்
* திருவண்ணாமலை மாவட்டம், முனுகப்பட்டு மன்னார்சாமி கோவில், கோவை, சூலக்கல் மாரியம்மன் கோவில், லிங்கனுார் கருப்பராயன் கோவிலில், தலா 1 கோடி ரூபாயில் புதிய பொங்கல் மண்டபங்கள் கட்டப்படும்
* சென்னை கொளத்துார் சோமநாத சுவாமி கோவில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில், தலா 2 கோடி ரூபாயில், புதிய மரத்தேர் அமைக்கப்படும்
* 16 கோடி ரூபாயில் 25 தேர்கள்; 40 கோடி ரூபாயில், 100 சிதிலமடைந்த கோவில் குளங்கள் சீரமைக்கப்படும்
* சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 5 கோடி ரூபாயில் தங்கும் விடுதி கட்டப்படும்
* திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 11 கோடி ரூபாயில், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்
* திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களை, ரயில், பஸ் நிலையங்களில் இருந்து, கட்டணமில்லாமல் அழைத்து வர, 1 கோடி ரூபாயில், நான்கு மினி பஸ்கள்; நெல்லை மாவட்டம், காரையார் அய்யனார் கோவிலுக்கு, கட்டணமில்லாமல் பக்தர்கள் சென்று வர, 1 கோடி ரூபாயில் இரண்டு பஸ்கள் வாங்கப்படும்
* கோவில் பணியாளர்களுக்கான ஈட்டிய விடுப்பை, 240 நாட்களாக உயர்த்தி, அதற்கான பணப் பலன்கள் வழங்கப்படும்
* கோவில் பணியாளர்களின் மகன், மகளுக்கு, கோவில் சார்பில் நடத்தப்படும் கல்லுாரிகளில் முன்னுரிமை வழங்கப்படும். கல்வி கட்டணத்தில், 50 சதவீத சலுகை வழங்கப்படும்
* கோவில் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில், நேரடி நியமனங்கள் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களை நிரப்ப, திருக்கோவில் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படும்
* இதுவரை அச்சுக்கு வராத கோவில் வரலாறு, பக்தி தமிழ் இலக்கிய நுால்கள் என, 108 நுால்கள் வெளியிடப்படும்
* கோவில் தல வரலாறு ஆங்கிலத்தில் வெளியிடப்படும்.
* அருளாளர் விழா, ஆழ்வார்கள் விழா, சித்தர்கள் விழா, கிராம தெய்வங்களின் கலை விழா நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
த.வெ.க., மென்மையாக இருந்தால் பா.ஜ.,வும் மென்மையாக இருக்கும்
-
பழைய துணிகளை இனி துாக்கி வீசாதீங்க மறுசுழற்சிக்கு தருமாறு கேட்கிறது மாநகராட்சி
-
அனைத்து துறைகளுக்கும் இரு அமைச்சர்களே பதில்
-
கிரைம் கார்னர்;கோவை
-
இன்றைய நிகழ்ச்சிகள் ...(22.08.20260 கோவை
-
சரிந்தது கரும்பு விளைச்சல் கசக்கிறது சர்க்கரை விலை