இன்றைய நிகழ்ச்சிகள் ...(22.08.20260 கோவை

ஆன்மிகம் கும்பாபிேஷகம் மகா கும்பாபிேஷக திருக்குட நன்னீராட்டு பெருவிழா, ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம், தொட்டிபாளையம். காலை 7 மணி- இரண்டாம் கால ஹோமம், மாலை 6 மணி- மூன்றாம் கால ேஹாமம், இரவு 9 மணி- யந்த்ர, விக்ரஹ ஸ்தாபனம்.

கும்பாபிஷேகம் அருள்மிகு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், சீரநாயக்கன் பாளையம். காலை 8 மணி - சிறப்பு பரிகார ஹோமம், மதியம் 12.30- ராஜகோபுர விமானங்கள் பிரதிஷ்டை, மாலை 6 மணி- யாகசாலை பூஜை, இரவு 7 மணி- யந்திர ஸ்தாபனம்.

பொது கண்காட்சி 'எலக்ட்ரோடெக்-26' என்ற மின் மற்றும் தொழில் துறை மின்னணுவியல் கண்காட்சி, கொடிசியா வர்த்தக வளாகம், பீளமேடு, காலை 10 மணி முதல்.

நாட்டிய நாடகம் ரோஜா கண்ணன் குழுவினர் வழங்கும், தியாக ரகசியம் நாட்டிய நாடகம், ஸ்ரீ சங்கர கிருபா கூத்தம்பலம், பரிபூரணா எஸ்டேட், கோவைபுதுார், மாலை 5.30 மணி.

வேலைவாய்ப்பு முகாம் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம், ரத்தினம் நிகர் நிலை பல்கலை வளாகம், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி, காலை 8 முதல் மதியம் 3 மணி வரை. ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகம்.

ஓவிய கண்காட்சி 'அரோரா-26' என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி, கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரி, பீளமேடு. காலை 10 முதல் மாலை 5 மணி வரை.

பட்டமளிப்பு விழா கே.எம்.சி.ெஹச் பார்மசி மற்றும் பிசியோதெரபி கல்லுாரி பட்டமளிப்பு விழா, என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், காளப்பட்டி, காலை 10 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் *ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைபுதுார். இரவு, 7 மணி முதல், 8.30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

* புனித ஜோசப் சர்ச், போத்தனுார் இரவு 7 முதல் 8.30 வரை.

Advertisement