அனைத்து துறைகளுக்கும் இரு அமைச்சர்களே பதில்

@quote@ சட்டசபையில், மானிய கோரிக்கை குறித்து பேசுவது இல்லை; திசை மாறி செல்கிறது. தொகுதி மறுவரையறை குறித்து மட்டும், ஒன்றே கால் மணி நேரம் பேசப்பட்டது. வாழ்த்தி பேசுவது, துதி பாடுவது என பாதி நேரம் செல்கிறது. தமிழக சட்டசபையா அல்லது டில்லியில் உள்ள பார்லிமென்டா என்ற சந்தேகம் எழுகிறது. மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் சட்டசபையில், மக்களுக்காக பேச வேண்டும்.

மானிய கோரிக்கை குறித்து பேசாமல் திசை மாறுவது, சட்டசபை உள்ளே உட்காரும்போது வேதனை அளிக்கிறது. தொகுதி பிரச்னை குறித்து பேச, வாய்ப்பு குறைவாக கிடைக்கிறது. இதர விஷயங்கள் குறித்து பேசுவோருக்கு அதிக வாய்ப்பு வழங்கப் படுகிறது. இதை சபாநாயகர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள், தங்களின் துறை குறித்து பேச வேண்டும். ஆனால், அனைத்து துறைகளுக்கும், ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்கள் மட்டுமே பேசுகின்றனர்.

- பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,quote

Advertisement