(ரெசிபி 2 )சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட்
சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் அனைத்து வகையான விருந்துக்கும் ஒரு அருமையான ஸ்டார்டர். சிக்கன் மற்றும் பன்னீர் ஒன்றாக சேர்த்து மென்மையான, சுவையான கட்லெட்டை தயாரிக்கலாம். மசாலா பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் இந்த கட்லெட் எளிதாக நாவில் கரையக் கூடியதாக இருக்கும். இந்த கட்லெட் வித்தியாசமான தனி சுவையைக் கொடுக்கும்.இந்த சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்டில் நூடூல்ஸில் பன்னீர், சிக்கன் போன்றவைகள் சிறிது சிறிதாக நறுக்கி போடப்பட்டிருப்பதால் அதன் சுவை அதிகமாகவே இருக்கும். இந்த சிக்கன் பன்னீர் கிலாபி எவ்வாறு செய்யலாம் இப்போது பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:250 கிராம் சிக்கன்(எலும்பில்லாதது)4 வெங்காயம்200 கிராம் பன்னீர்4 பச்சை மிளகாய்3 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்2 ஸ்பூன் சோள மாவு1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்1 1/2 ஸ்பூன் இஞ்சி விழுது1 ஸ்பூன் பூண்டு விழுது1 ஸ்பூன் மிளகாய் தூள்1 ஸ்பூன் மல்லித் தூள்1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்தேவையான அளவு உப்பு3 ஸ்பூன் எள்தேவையான அளவு ரீபைண்ட் ஆயில்செய்முறை:ஒரு பாத்திரத்தில் பன்னீர் எடுத்து அதனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் சேர்த்து, வெங்காயம், பொடியாக நறுக்கிய மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிது மிளகாய் தூள் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் ஒரு பேஸ்ட் போல் அரைத்து வைக்க வேண்டும்.மற்றொரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் பேஸ்டை எடுத்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், சோள மாவு 2 டீஸ்பூன், எள், -3 டீஸ்பூன் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்று சேரும்படி நன்றாகக் கலந்து விட வேண்டும்.மசாலா கலந்து வைத்த பன்னீர் துண்டுகளை எடுத்து சிக்கன் பேஸ்டில் நன்கு கலந்து அதனை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் மேல்புறம் வெந்து உள்ளே வேகாமல் இருக்கும். எண்ணெயில் பொரிப்பது பிடிக்கவில்லை என்றால், தவாவில் போட்டும் இரண்டு புறமும் வேகும்படி நன்கு சுட்டு எடுக்கவும். இப்போது சுவையான சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் தயார்.
மேலும்
-
சுவீடனில் வாளுடன் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 18 வயது இளைஞர் கைது; ஒருவர் பலி
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?