உணவுப்படியில் பாரபட்சமாபோலீசார் குமுறல்   

சிவகங்கை, ஆக.22-சிவகங்கையில் அனைத்து போலீசாருக்கும் உணவுப்படி வழங்காமல், குறிப்பிட்ட சிலர் மட்டுமே எடுப்பதாக போலீசார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மாவட்ட அளவில் அனைத்து சப்- டிவிஷனின் கீழ் 48 ஸ்டேஷன்கள், மகளிர் ஸ்டேஷன், சிறப்பு பிரிவு ஸ்டேஷன்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். இவர்களில் கிரேடு 2 முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான அனைவருக்கும் மாதத்திற்கு 6 நாட்கள் வீதம் உணவு படியாக (நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம்) ரூ.1,500 வரை அரசு ஒதுக்கீடு செய்கிறது. இந்த உணவு படியை வெளியூர்களுக்கு பாதுகாப்பு பணி செல்வோருக்கு மட்டுமின்றி, அனைத்து போலீசாருக்கும் வழங்க வேண்டும். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் அரசின் உத்தரவிற்கு மாறாக குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே மாதந்தோறும் உணவு படியை வழங்கிவிட்டு, எஞ்சிய தொகையை விடுவிக்க மறுப்பதாக புகார் உள்ளது.

குறிப்பாக எஸ்.பி., தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உணவுப்படியை எடுத்து விடுகின்றனர். அதே நேரம் பிற ஸ்டேஷன்களில் பணிபுரியும் தனிப்பிரிவு போலீசார், ஸ்டேஷன் போலீசாருக்கு உணவு படி விடுவிப்பதே இல்லை.

* வெகுமதிக்காக வழங்க மறுப்பு: இது குறித்து காவல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாதந்தோறும் 6 நாட்களுக்கு கண்டிப்பாக கிரேடு 2 போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு உணவு படியை விடுவிக்க வேண்டும். ஆனால், இது போன்ற நிதியை விடுவிக்காமல் அரசுக்கு திரும்ப ஒப்படைத்து விடுகின்றனர் என்றார்.

Advertisement