மொபட்டின் பின் சக்கரத்தில் சேலை சிக்கியதில் தாய் பலி

குளித்தலை:மொபட்டின் பின் சக்கரத்தில் சேலை சிக்கியதால், தாய் கீழே விழுந்து இறந்தார். அவரது மகள் லேசான காயமடைந்தார்.
இகுளித்தலை அடுத்த ஆர்.டி.மலை பஞ்., நாவல் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சித்ரா, 41. இவர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த 15ம் தேதி காலை, 8:15 மணியளவில் வேலைக்கு புறப்பட்டார். அதற்குள் பஸ் சென்று விட்டது. இதனால் அவரது மகள் கஸ்துாரியுடன், 19, டி.வி.எஸ். எக்ஸெல் மொபட்டில் சென்றார். சிறிது துாரம்
சென்றபோது, சித்ராவின் சேலை வாகனத்தின் பின்
சக்கரத்தில் சிக்கியது.
இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். தலையில்
படுகாயமடைந்த அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 19ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மகள் கஸ்துாரிக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.

Advertisement