கண்மாய்க்குள் புகுந்த அரசு பஸ்

கடமலைக்குண்டு: வருஷநாட்டில் இருந்து மயிலாடும்பாறை நோக்கி (டி.என்.57.என் 2352)சென்ற அரசு பஸ்சை டிரைவர் பாக்கிய செல்வம் 45, ஓட்டி சென்றார். பஸ் ஓட்டணை அருகே சென்ற போது பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய்க்குள் புகுந்தது.

பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 41 பள்ளி குழந்தைகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement