தாலுகா அலுவலகங்களில் பி.ஓ.எஸ்., கருவிகளை ஒப்படைத்து போராட்டம்

சிவகாசி: சாத்துார்,சிவகாசி, தாலுகாக்களில் ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னையால் (பாயிண்ட் ஆப் சேல்) பி.ஓ.எஸ்., கருவி இயங்காததால் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் விற்பனையாளர்கள் மின்னணு இயந்திரத்தை தாலுகா அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.

சிவகாசியில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் பி.ஓ.எஸ்.கருவியை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மாவட்டத் தலைவர் மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

* சாத்துாரில் ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமையில் 52 பேர் சாத்துார் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தலையில் மிஷினை சுமந்தபடி துணை தாசில்தார் தீபாவிடம் பி. ஓ .எஸ் மிஷினை ஒப்படைத்தனர்.வருவாய் துறையினர் சர்வர் பழுது சரி செய்யப்பட்டு வருவதாக சமரசம் செய்ததை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் பி.ஓ.எஸ் மிஷினை திரும்ப பெற்று சென்றனர்.

Advertisement