கனடா சீக்கியக் கோவிலில் கத்திக்குத்து தாக்குதல்; பிரதமர் மார்க் கார்னி கண்டனம்
நமது நிருபர்
கனடாவின் எட்மண்டனில் உள்ள சீக்கியக் கோவிலில் நடத்த தாக்குதல் சம்பவம், பயங்கரவாத செயல் என அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி கண்டனம் தெரிவித்தார்.
கனடாவின் எட்மண்டனில் சீக்கிய கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். அங்கு ஒருவர் பயங்கர கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். உடனே அங்கே இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் 75 வயது முதியவர் மற்றும் 51 வயது ஆண் ஆகிய
இருவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 27 வயதான சந்தேக நபர் 2015ம் ஆண்டு முதல் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த கத்திக்குத்து சம்பத்திற்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கனடாவைத் தளமாகக் கொண்ட உலக சீக்கிய அமைப்பு, இந்தத் தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாகவும், நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வரும் பின்னணியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சீக்கியக் கோவிலில் நடத்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாதமானது என அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை எட்மண்டனில் உள்ள சீக்கிய கோவிலில் நடந்த தாக்குதல் பயங்கரமானது. இந்த கொடூரமான நிகழ்வால், தங்கள் வழிபாட்டுத் தலத்தில் யாரும் பாதுகாப்பற்றதாக உணரக்கூடாது. தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்த எட்மன்டன் போலீசாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
சுவீடனில் வாளுடன் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 18 வயது இளைஞர் கைது; ஒருவர் பலி
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?