குட்டி பாப்பாவுக்கு மொட்டை போடறதுன்னா சும்மாவா!
பாப்பாக்களுக்கு பார்த்து, பதறாமல் அழகாக மொட்டை போடும் பிரியாவை பார்த்தபோது மேலே இருக்கும் வரிகள்தான் மனதில் வந்து போனது.
இங்கிலாந்தில் வசிக்கும் சாதாரண தமிழ் குடும்பப் பெண் பிரியா, இன்று ‘கேர்ள் பார்பர்’ என்ற அடையாளத்துடன் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.
திருமணத்துக்கு பிறகு கணவருடன் இங்கிலாந்து சென்ற இவர், முதல் குழந்தை பிறந்ததும் வேலையை விட்டுவிட்டு முழுநேர மம்மியாக இருந்தார்.
ரொம்ப போரடித்தது. வீட்டுல இருக்குற நேரத்துல புதுசா ஏதாவது கற்றுக்கொள்ளும் ஆசையில் ஹேர் டிரசிங், பார்பர் கோர்ஸ் கற்றுக்கொண்டார்.
அப்போது இந்தியர்களின் குழந்தைகளுக்கான முதல் முடி திருத்தத்தை, அங்குள்ள பார்பர்கள் நம்ம ஊர் முறையில் செய்வதில்லை என்பதை கவனித்தார்.
ஏன் இதை நாம் செய்யக்கூடாது என்று யோசித்து துவங்கினார். ஆரம்பத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலமாக மட்டுமே தகவலை பகிர்ந்தார்.
எப்போது கிடைப்பார் இப்படி ஒரு ஆள் என காத்திருந்த நம் ஆட்கள், அட்ரஸ் தேடி வந்து காலிங்பெல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதில், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு முடி திருத்தம் செய்த அனுபவம், அவருக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்தது.
பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தருணங்கள் தனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் என்கிறார் பிரியா.
8 ஆண்டுகள் ஆகி விட்டன. மொட்டை குழந்தைகளின் சிரிப்பும், பெற்றோரின் நன்றியும் இன்று பிரியாவை ‘பிசியா’ மாற்றி விட்டது.
யுகேவில் உள்ள இவரை, ஒரு குழந்தையின் முதல் முடி திருத்தத்துக்காக திருப்பதிக்கே அழைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
“பெண் பார்பர்னு சொன்னாலே ஆச்சரியப்படுறாங்க. ஆனா இது எனக்கு வெறும் வேலை இல்லை… passion. குழந்தைகளோட அந்த முக்கியமான அந்த first moment-ல நானும் ஒரு பங்கா இருக்குறது தான் பெரிய சந்தோஷம்,” என்கிறார் பிரியா.
“பார்பர் வேலை ஆண்களுக்கு மட்டும்னு இல்ல… பெண்களும் கத்துக்கிட்டு சாதிக்கலாம்” எனும் பிரியா, யு டியூப் வாயிலாக பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளார்.
மேலும்
-
அமெரிக்க வரி விதிப்புக்கு தக்க பதிலடி கொடுப்போம்; கனடா பிரதமர் திட்டவட்டம்
-
இத்தனை நாளாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தேன்; கிரிக்கெட் வீரர் சரண்ஷ் ஜெயின் தந்தை கண்ணீர்
-
பள்ளி மாணவனுக்கு ‘ துாய்மை துாதுவன்’ சான்று
-
உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்க வேண்டும்; ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மோடி வலியுறுத்தல்
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி கடை உரிமையாளர் சுட்டுக்கொலை
-
நீலகிரியில் சி.ஓ.ஏ. கணினி தேர்வில் ஏமாற்றம்