திண்ணையில் திடீரென விழுந்த மின் கம்பம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் முத்தாலம்மன் கோயில் தெருவில் அகற்றப்படாத மின்கம்பம் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் முறிந்து வீட்டின் முன் விழுந்து கிடக்கிறது.

அப்பகுதி பிரபாவதி கூறியதாவது: நான்கு ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டருகே சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றாமல் புதிய மின் கம்பம் நட்டு ஒயர்களை மாற்றினர். மின்கம்பத்தை அகற்றும்படி தெரிவித்தும், ‘ஒன்றும் ஆகாது’ என அலட்சியமாக பதில் கூறினர்.

மற்றொரு மின் கம்பம் பகுதியில் கான்கிரீட் அமைத்தனர். இரு நாட்களுக்கு முன் அகற்றப்படாத மின்கம்பம், திடீரென முறிந்து வீட்டுத் திண்ணையில் விழுந்தது. கழிப்பறை செல்லும் வழியை மறைத்துள்ளதால், பார்வையற்ற அண்ணனுடன் 2 நாட்களாக மின்சாரம் இன்றி வீட்டில் சிரமங்களை சந்திக்கிறோம். வழக்கம்போல திண்ணையில் ஆட்கள் அமர்ந்திருந்தால் விபரீதம் விளைந்திருக்கும். புகார் அளித்தும் மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் என்றார்.

Advertisement