எண்ணெய்வித்துக்கள், சிறுதானியங்கள் பயிரிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் மத்திய அரசின் இணைச் செயலாளர் அறிவுரை
விழுப்புரம்: மத்திய அரசு சார்பில், வேளாண் துறையில் செயல்படுத்தப்படும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், ஆகிய திட்டங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் இணைச் செயலாளர் இனிதா, விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இணைச் செயலாளர் இனிதா தலைமை வகித்து ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் (பொ) சுரேஷ், தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் வேளாண் உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், பேசிய இணைச் செயலாளர் இனிதா, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் ஆகிய திட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள செயல்விளக்க திடல்களுக்கு ஏற்ப, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்தல் வேண்டும்; மேலும், செயல் விளக்க திடல்களுக்கு சுற்றியுள்ள விவசாயிகளுக்கும், இத்திட்டத்தின் நன்மைகள், வருவாயை அறிந்து, அவர்களும் இத்தகைய பயிர் சாகுபடி செய்ய முன்வர செய்ய வேண்டும்;
தமிழகத்தில் கம்பு, கேழ்வரகு, திணை, உளுந்து ஆகிய பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்து, நமது ஊட்டச்சத்து தேவைகளை நாமே பூர்த்தி செய்ய வேண்டும்;
உணவு தயாரிக்க பயன்படுத்தும் சமையல் எண்ணைய்கள் அனைத்திலும் நமது நாடு தற்சார்பு அடைந்திடும் வகையில், எண்ணெய் வித்துக்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; என, அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, வேளாண்மை உதவி இயக்குநர்கள் கூறுகையில், 'சிறுதானிய சாகுபடி செயல்விளக்க திடல்களுக்கு அதிக பின்னேற்பு மானியம் வழங்கவும், மணிலா, உளுந்து பயிர் சாகுபடிக்கு, இயந்திர அறுவடை சார்ந்த மானியங்கள் வழங்கவும் வலியுறுத்தினர். மேலும், விதைகள் வழங்குவதற்கு நவீன விதை சுத்திகரிப்பு மையம் வேண்டும். காய்கறிகள், பந்தல் காய்கறிகளுக்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளதால், இதற்கான ஆண்டு இலக்கினை அதிகரிக்கவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும்
-
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
-
வெர்ல்பூல் கம்பெனியில் அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ., மீது வழக்கு அதற்கு போட்டியாக எம்.எல்.ஏ., புகார்
-
சென்னைக்கு காரைக்காலில் ரூ.15 லட்சம் மோசடி புகார் மாஜி எம்.எல்.ஏ., உட்பட இருவர் மீது வழக்கு
-
குடியிருப்போர் நல சங்க ஓணம் கொண்டாட்டம்
-
குப்பையை ரோட்டில் கொட்டுவதால் அவதி
-
சேவைக்குக் கிடைத்த மகுடம்