குடியிருப்போர் நல சங்க ஓணம் கொண்டாட்டம்
மூணாறு, ஆக.23-
மூணாறில் குறிஞ்சி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஓணம் கொண்டாடப்பட்டது.
எம்.எல்.ஏ., ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெல்சன், ஊராட்சி உறுப்பினர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். அத்தப்பூ கோலமிட்டு, பல்வேறு கலை போட்டிகள் நடந்தன. ஓணம் பண்டிகையின்போது முக்கியமாக இடம் பெறும் முற்றிலும் சைவத்தில் அறுசுவை விருந்தான ஓண சத்யா எனும் விருந்தோம்பல் நடந்தது. சங்கத்தைச் சேர்ந்த சார்லஸ், ரீனா தம்பதியினரின் மகள் ரியாமரியா கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். அந்த மாணவிக்கு கேடயம், பணமுடிப்பு ஆகியவவை வழங்கி கவுரவித்தனர். விழாக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமராஜ், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் முகமது ஹாரூன் ஆகியோர் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement