லாட்டரி சீட்டு விற்றவர் கைது

 கடலுார், ஆக. 23–

லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் முதுநகர் போலீசார் நேற்று கடைவீதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த, மணக்குப்பத்தை சேர்ந்த ராஜா (எ) மின்னல் ராஜா,55; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement