பெண்கள் குறித்து மனுஸ்மிருதி சொல்வது என்ன; ராகுல் சர்ச்சை பேச்சு
புனே: பெண்கள் கணவனையும், குழந்தைகளையும் சார்ந்து இருக்க வேண்டும் என்று மனுஸ்மிருதியில் குறிப்பிட்டிருப்பது அவமானகரமானது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த 'சாத்ரோன் கி கூன்ச்' என்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; நாட்டில் உள்ள 70 கோடி பெண்கள் தனித்திறமை வாய்ந்தவர்கள். ஒவ்வொருவரும் தனித்தனி கனவுகள், எண்ணங்களுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் இயல்பாகவே, ஆண்களை விட, உணர்வு மிக்கவர்களாகவும், தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாகவும் உள்ளனர்.
'சிறுவயதில் ஒரு பெண் தன் தந்தைக்கு கட்டுப்பட்டவளாக இருக்கிறாள். இளமைப் பருவத்தில் தன் கணவனுக்கு உரியவளாக இருக்கிறாள். கணவன் இறந்த பிறகு, தன் மகன்களுக்கு உரியவளாக வாழ்கிறாள். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது,' என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டு இருக்கிறது. இத்தகைய வார்த்தைகள் அவமானகரமானவை. பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தந்தை, கணவனை என யாரையும் சார்ந்து வாழக் கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் , பெண்களாக இருக்கும் வரை நல்லது . இல்லையேல் சீரழிவு உறுதி . மேற்கத்திய நாடுகளில் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது . தெளிதல் நலம் .
பாரதத்தின் அவமானம்
அறிவே இல்லாத தத்தி பப்பு.. மனுஸ்ம்ருதி எங்கே நடைமுறையில் இருக்கிறது?மேலும்
-
ஜவுளி சந்தை வர்த்தக இலக்கு 33.50 லட்சம் கோடி ரூபாய் மத்திய ஜவுளி துறை கமிஷனர் தகவல்
-
கொடிசியாவில் நாளை வரை 'எலக்ட்ரோடெக்' கண்காட்சி
-
ரூ.1.26 கோடி நிதி திரட்டியது 'வேளாண் மார்ட்'
-
சரக்கு கையாள்வதில் சிக்கல்களுக்கு தீர்வு துாத்துக்குடி துறைமுக அதிகாரி பேச்சு
-
மூன்றில் ஒரு கால்நடைக்கு அடர்தீவனம் கிடைக்கவில்லை 37 சதவிகிதம் பற்றாக்குறையால் புதிய சவால்
-
நாடு முழுதும் வீடு விலை 6 சதவீதம் உயர்வு