நீலகிரியில் சி.ஓ.ஏ. கணினி தேர்வில் ஏமாற்றம்

மறுகூட்டலுக்கு மாணவர்கள் எதிர்பார்ப்பு

குன்னூர்:

தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு பணிகளுக்கான தட்டச்சு தேர்வுடன் சி.ஓ.ஏ. கணினி தேர்வு எழுத உத்தரவால், கடந்த ஏப்., மாதம் தேர்வு நடந்தது. கோத்தகிரி உட்பட சில இடங்களில் காலையில் நடந்த தேர்வுகளில் கீபோர்டில் அழுத்தும் எழுத்து ஆன்லைன் சர்வரில் விடைகள் பதிவாகவில்லை. என, புகார் தெரிவித்தனர். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற முடியவில்லை. மறுகூட்டல் விண்ணப்பிக்கும் ஆன்லைன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மறு தேர்வு எழுத ஏழை எளியோர் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி உள்ளனர்.



மாணவர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் கூறுகையில், தமிழகத்தின் பல இடங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டது. மாற்று கீ போர்டு கொண்டு சென்று பயன்படுத்தியவர்கள் வெற்றி பெற்றனர். பழைய விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அந்தந்த வங்கி கணக்கில் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

இனிவரும் தேர்வுகளில் இதுபோன்ற தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்படாதவாறு தேர்வு இயக்ககம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement