கார் பந்தயத்தில் விபத்து; அஜித் காயமின்றி தப்பினார்
-நமது நிருபர்-
ஐரோப்பாவில் நடக்கும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடிகர் அஜித் குமார் கார் விபத்தில் சிக்கியது. அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை அவர் முழுமையான பாதுகாப்புடன் உள்ளார் என அவரது அணியினர் விளக்கம் அளித்தனர்.
ஐரோப்பாவில் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயம் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் தனது அணியுடன் பங்கேற்றார். போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த போது அஜித்தின் கார் எதிர்பாராதவிதமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனை பார்த்த உடன் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு அவர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாக காரில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து அவர் பந்தயத்தில் பங்கேற்றார். அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை அவர் முழுமையான பாதுகாப்புடன் உள்ளார் என அவரது அணியினர் விளக்கம் அளித்தனர். அவரது விடாமுயற்சியை அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.
சிறப்பு வீடியோ!
விபத்தில் சிக்கிய அஜித்: அதிர்ச்சியில் ரசிகர்கள்; நடந்தது என்ன என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்