2029ல் லோக்சபா தேர்தலுடன் 22 மாநில சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த பரிசீலனை!
புதுடில்லி: 2029ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தலையும் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது குறித்து ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்திய இந்த குழு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இதையடுத்து, 2024 டிசம்பரில் நடந்த பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, அரசியலமைப்பு 129-வது திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பார்லி., கூட்டுக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. தொடர்ந்து, அக்குழுவின் தலைவராக ராஜஸ்தானின் பாலி தொகுதி பா.ஜ., - எம்.பி., பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டார்.
பல்வேறு தரப்பினரிடம் ஆலோசித்து கருத்துக்களை கூட்டுக்குழு கேட்டு வருகிறது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை, 2029க்குள் முழுமையாக செயல்படுத்தும் வகையில், அதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் பார்லி., கூட்டுக்குழு தீவிரம் காட்டி வருவதாக அதன் தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்தார்.
இந்நிலையில் 2029ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல்களை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்படுகிறது. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்றன.
அதிகாரப்பூர்வ மசோதாக்களின்படி முதல் கட்டமாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை முழுமையாக 2034ல் துவங்க திட்டமிடப்பட்டு இருந்தாலும், 2029ம் ஆண்டிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 22 மாநிலங்களை ஒருங்கிணைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.
இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் பல மாநிலங்களின் தற்போதைய சட்டசபை பதவிக்காலம் குறைக்கப்பட வேண்டியிருக்கும். சட்டசபை கலைக்கப்பட்டவுடன், 1950ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் கமிஷன் ஆறு மாதங்களுக்குள் தேர்தல்களை நடத்த வேண்டும். தற்போதுள்ள மசோதாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட முன்னதாகவே ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த முடியுமா என்ற கேள்விக்கு பார்லி., கூட்டுக்குழு தலைவர் பி.பி.சவுத்ரி கூறியதாவது:
இது மாநில முதல்வர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இந்த விவகாரம் குழுவின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது; சில மாநில பாஜ முதல்வர்கள் ஏற்கனவே இத்தகைய திட்டத்திற்கு தங்களது ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோவா, உத்தராகண்ட், ஹரியானா மற்றும் டில்லி ஆகிய 4 மாநில முதல்வர்கள் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
2029ல் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தால், கோவா, குஜராத், மணிப்பூர், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டு குறையும்; சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான், திரிபுரா சட்டசபைகளின் பதவிக்காலம் நான்கு ஆண்டு குறையும்.
வாசகர் கருத்து (4)
sarasija - ,
23 ஆக்,2026 - 16:33 Report Abuse
FCRA மசோதா, குளிர்காலத் தொடரில் தீர்மானிக்கப்பட்டால் வெளிநாட்டுப் பணம் விளையாடுவது தவிர்க்கப்படலாம். இது ஒரு நல்ல முயற்சியாகவே பார்க்கப் படவேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையில்லை. விளைவைக் கருதாமல் BJP அரசு முன்னேற வேண்டும். நாட்டுக்கு செலவு மிகவும் குறையும். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
23 ஆக்,2026 - 15:51 Report Abuse
மோடி எனும் ஒற்றை மனிதரின் பிரச்சாரத்தை நம்பி களத்தில் இறங்கும் 22 மாநிலங்கள். அவரால் ஒரு மாதத்துக்குள் எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்ய முடியுமா? கூட்டணியிலுள்ள பெரிய மாநிலக் கட்சிகள் ஏற்கத் தயங்கும். (ஆனால் வழக்கம் போல ராஹுலின் பிரச்சாரம் உதவும்) 0
0
Reply
முருகன் - ,
23 ஆக்,2026 - 14:12 Report Abuse
தமிழகத்திற்கும் சேர்த்து நடந்த வேண்டும்
இங்கே ஒருவர் அடுத்த கட்சியை ஆட்டயா போடுவதில் குறியாக உள்ளார் 0
0
Abdul Rahim - Karaikudi,இந்தியா
23 ஆக்,2026 - 16:18Report Abuse
பாஸ் இந்த 22 மாநிலங்களில் உங்க பார தீய ஜனதா அடுத்த கட்சிகளை கபளீகரம் செய்து ஆட்சி அமைத்த மாநிலங்கள் தான் அதிகம். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement