அமெரிக்காவில் இந்திய வம்சாவளி கடை உரிமையாளர் சுட்டுக்கொலை

2

வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில், தனது கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது, ​​62 வயதான இந்திய வம்சாவளி கடை உரிமையாளர் சுரேஷ் படேல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் படேல், 62. இவர் அமெரிக்காவின் டென்னசி மாகாணம், ஜாக்சன் நகரில் மதுபான கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையன் ஒருவன் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.

பிறகு முகமூடி அணிந்து இருந்த அந்த கொள்ளையன் சுரேஷ் படேலை சுட்டுக் கொன்றுவிட்டுப் பணத்துடன் தப்பியோடினான். அருகில் நின்றிருந்த அவரது மகள் உயிர் தப்பினாலும், கண்முன்னே நிகழ்ந்த இந்த கோரச் செயலால் மிகுந்த மனஅதிர்ச்சிக்குள்ளானார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர். சம்பவம் பற்றிய தகவல்களை அளிக்கும்படியும் பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement