உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்க வேண்டும்; ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மோடி வலியுறுத்தல்
புதுடில்லி: இந்தியாவின் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை பாராட்டிய பிரதமர் மோடி, ''உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்கவும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும்'' என்றார்.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு டில்லியில் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சி.இ.ஓ.,களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நீங்கள் ஒரு புதிய துறையில் திறமையையும், துணிச்சலையையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.
நாம் எடுக்கும் முடிவுகள் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
@quote@முடிவுகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது; அப்போதுதான், ஆபத்துகளை எதிர்கொள்ளத் துணிபவர்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதி அளிக்கும். இந்தியாவின் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி, உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்கவும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
quote
நம் நாட்டு மக்களிடம் இயல்பாகவே ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறன் அதிகமாக இருப்பதால், இத்துறையில் நமக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் மிக விரைவாக உருவாக்கிக்கொள்ள முடியும். வழக்கமான பயன்பாடுகளுக்கு அப்பால் சிந்தித்து, தங்களின் தொழில்நுட்பங்கள் அன்றாட சவால்களை எதிர்கொள்ளவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும்.
ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் போதெல்லாம், சர்வதேச கவனம் இயல்பாகவே இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பக்கம் திரும்பும் நிலையை நாடு எட்ட வேண்டும். உலகம் இப்போது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும்,
இதில் யார் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்? என்று வியந்து கொண்டிருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள விண்வெளித்துறையைச் சேர்ந்தவர்கள், 'நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள்; இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணையுங்கள். இந்திய விண்வெளி நிறுவனங்களுடன் இணையுங்கள். இவவாறு பிரதமர் மோடி பேசினார்.
திறமையானவர்களை ஈர்க்கப்போறீங்களா >> ஏதாவது எழுதிடப்போறேன் .....
தயவுசெய்து ராகுல் காந்தி போன்ற அதி திறமையானவர்களை ஈர்க்க வேண்டாம்.மேலும்
-
திருவாடானை கோயிலில் முகூர்த்த நாள் கூட்டம்
-
செய்தி சாரல்
-
‘காந்திபுரம் மேம்பாலத்தில் இறங்குதளம் என்னவானது?’
-
2029ல் லோக்சபா தேர்தலுடன் 22 மாநில சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த பரிசீலனை!
-
எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
கார் பந்தயத்தில் விபத்து; அஜித் காயமின்றி தப்பினார்