பள்ளி மாணவனுக்கு ‘ துாய்மை துாதுவன்’ சான்று
ஊட்டி:
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு கருமாரியம்மன் கோவில் பகுதியில் வசிக்கும், 6 ம் வகுப்பு படிக்கும் ஹாம் ஹெய்டன் என்ற மாணவன் நாள்தோறும் நகராட்சி ஊழியர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை, 4 வகையாக தரம் பிரித்து வழங்கி வருகிறார். இதனை கவனித்த நகராட்சி ஊழியர்கள் கமிஷனர், ஆய்வாளர்களுக்கு அந்தப் பகுதியில் ஏராளமான வீடுகளில் பொதுமக்கள் குப்பைகளை வழங்கி வரும் நிலையில், மாணவன் ஒருவன் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்கிறார் என தெரிவித்துள்ளனர். கமிஷனர் பார்த்தசாரதி, நகராட்சி ஆய்வாளர்கள் பால் முருகன் , பாண்டி செந்தில்குமார் மேற்பார்வையாளர்கள் மனோகரன் வேணுகோபால், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர் சைலேஷ் உள்ளிட்டோர், மாணவன் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாணவனை பாராட்டி, ‘தூய்மை தூதுவன்’ என்ற பாராட்டு சான்றினை வழங்கினர்.
நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி கூறுகையில், ‘‘ நீலகிரியில் பிளாஸ்டிக் தடை இருப்பதால் ஒவ்வொரு பகுதியிலும் குப்பைகளை சேகரிக்க வரும் ஊழியர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். 6 ம் வகுப்பு மாணவனின் செயல் பாராட்டுக்குரியதாகும். குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் பிளாஸ்டிக்கையும் தவிர்த்து தூய்மையான நகரை உருவாக்க முடியும்.’’ என்றார்
மேலும்
-
திருவாடானை கோயிலில் முகூர்த்த நாள் கூட்டம்
-
செய்தி சாரல்
-
‘காந்திபுரம் மேம்பாலத்தில் இறங்குதளம் என்னவானது?’
-
2029ல் லோக்சபா தேர்தலுடன் 22 மாநில சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த பரிசீலனை!
-
எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
கார் பந்தயத்தில் விபத்து; அஜித் காயமின்றி தப்பினார்