இத்தனை நாளாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தேன்; கிரிக்கெட் வீரர் சரண்ஷ் ஜெயின் தந்தை கண்ணீர்
புதுடில்லி: ''என் மகன் இந்திய அணிக்காக விளையாடுவதை காண்பதற்காவே இத்தனை நாட்களும் புற்றுநோயுடன் போராடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தேன்'' என இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் சரண்ஷ் ஜெயின் தந்தை சுபோத் ஜெயின் கண்ணீருடன் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில், இந்தியா சார்பில் ம.பி., மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சரண்ஷ் ஜெயின் களம் இறங்கியுள்ளார். தன் மகன் இலங்கைக்கு எதிராக விளையாடுவதை டிவியில் பார்த்த அவரது தந்தை சுபோத் ஜெயின் கூறியதாவது: என் மகன் இந்தியாவுக்காக விளையாடுவதைப் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது அவன் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்திருக்கிறான். நான் தொடர்ந்து போராடி, அவன் மேலும் பல உயரங்களை எட்டுவதைக் காண விரும்புகிறேன்.
@quote@என் மகன் இந்திய அணிக்காக விளையாடுவதை காண்பதற்காவே இத்தனை நாட்களும் புற்றுநோயுடன் போராடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தேன். அழுவதா சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை. quoteநான் அவனுக்குப் பயிற்சியாளர், ஆனால் நான் அவனுடைய தந்தையும் கூட. அவனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது எங்களுக்கு ஒரு கனவாக இருந்தது. அவன் இந்தியாவுக்காக விளையாடப் போகிறான் என்பது இத்தனை நாட்களாக நம்ப முடியாத ஒரு விஷயமாக இருந்தது. 2014ல், சரண்ஷ் இந்தூர் கிளப் ஒன்றுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில், எனக்கு வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு என் வாய் கடுமையாக வீங்கியிருந்தது, என்னால் பேச முடியவில்லை. என் மனைவியும் மூத்த மகனும் நான் வேலையாக இருப்பதாக அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவன் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்து என்னைப் பார்த்தபோது, மிகவும் மனம் உடைந்து போய்விட்டான்; அவன் கண்ணீருடன் தன் சகோதரனிடம் கிரிக்கெட்டிலிருந்து விலக விரும்புவதாகக் கூறிக்கொண்டிருந்தான். நான் ஒரு காகிதத்தையும் பேனாவையும் கேட்டேன். கிரிக்கெட்டில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டால், நான் விரைவில் குணமடைவேன் என்று எழுதினேன்.
அவன் என்னிடமிருந்துதான் ஆப்-ஸ்பின் பந்துவீசக் கற்றுக்கொண்டான். நான்தான் அவனுக்கு அந்த நுணுக்கத்தைக் கற்றுக்கொடுத்தேன்.
@quote@அவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2014 முதல் 2019 வரை, அவர் வெறும் எட்டு ரஞ்சிப் போட்டிகளில் மட்டுமே விளையாடி 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினான்.quote
ஆனால், சந்து சார் வந்த பிறகு, அவனுக்கு வழிகாட்டியதன் மூலம், மத்தியப் பிரதேச அணியின் நிரந்தர வீரரானார். அந்த அணி ரஞ்சிக் கோப்பையை வெல்லவும் உதவினான். இவ்வாறு சரண்ஷ் ஜெயின் தந்தை சுபோத் ஜெயின் தெரிவித்தார்.
இதைத்தான் "பெத்த மனம் பித்து" என்று தமிழில் சொல்வார்கள். இன்றைய இளைஞர்கள் இந்த வரியின் அர்த்தத்தை முழுமையாக அறிந்துகொண்டு, பெற்றவர்கள் கண்ணில் ஆனந்த கண்ணீரை தவிர, வேறு எந்த கண்ணீரும் வராமல் அவர்களை பேணிக்காக்கவேண்டும். வாழ்த்துக்கள் புதிய கிரிக்கெட் வீரர் சரண்ஷ் ஜெயின் அவர்களுக்கு.மேலும்
-
திருவாடானை கோயிலில் முகூர்த்த நாள் கூட்டம்
-
செய்தி சாரல்
-
‘காந்திபுரம் மேம்பாலத்தில் இறங்குதளம் என்னவானது?’
-
2029ல் லோக்சபா தேர்தலுடன் 22 மாநில சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த பரிசீலனை!
-
எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
கார் பந்தயத்தில் விபத்து; அஜித் காயமின்றி தப்பினார்