பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் பறிப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, சுந்தரகவுண்டனுாரை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் மனைவி லட்சுமிதேவி, 50. இவர், மகள் கிருத்திகா, 25, உடன் கோட்டூரில் திருமணத்துக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். வாகனத்தை கிருத்திகா ஓட்டினார்.
பெரியாக்கவுண்டனுார் அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள், லட்சுமிதேவி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அவரது தலையில் அடிப்பட்டது. வாகனத்தை ஓட்டிய கிருத்திகாவுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.
அவ்வழியாக வந்தவர்கள், அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை ‘கவரிங்’ என்று கூறியுள்ளார்.