பணம், நகை திருடிய இருவர் கைது

நெகமம்: பொள்ளாச்சி அருகே, மரம்பிடுங்கிகவுண்டனூரில் வீட்டில் பணம் மற்றும் நகைகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி, மரம்பிடுங்கிகவுண்டனூரை சேர்ந்தவர் பரமசிவம், 65. இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை உடைத்து, ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகைகளை திருடி சென்றனர்.

இது குறித்து, நெகமம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காட்டம்பட்டி கல்லுமடை பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர்.

அதில், சிவகங்கை, திருப்புவனம் பகுதியைச்சேர்ந்த முகேஷ் கண்ணன், 24, மற்றும் தங்கப்பாண்டி, 25, என்பதும், பரமசிவம் வீட்டில் நகை, பணம் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement